Tuesday, 6 November 2012

நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு

ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள். ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?
ஃபாதர் சொன்னார்.. என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டுவிடும்.”

அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள்.
பாதிரியார் பெருமையுடன், என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார் என்றார்.

அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, “அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?” என பாடின.

தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு” என்றது உற்சாகத்துடன்..!!!!

Tuesday, 30 October 2012

ஒரு நாய் கடைக்கு

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....

# # # #
நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது..

வெங்காயம்


ஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி & ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம்.ஒரு நாள் 3ம் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கறைஞ்சி போயிடுச்சாம்.தக்காளியும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம்.வீட்டுக்கு வர வழியில லாரியில அடிபட்டு தக்காளியும் நசுங்கி செத்துப்போச்சாம்.உடனே வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி “ஐஸ் கிரீம்
செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி
செத்தப்ப நான் அழுதேன்..ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா
எனக்குன்னு அழ யாரு இருக்கா”ன்னு கேட்டுச்சாம்..அதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்!
அதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி
வருதாம்..!!

Wednesday, 24 October 2012

ஆவியின் ரத்தம்

ஒரு பையன் ஒரு பெண்ணை காதலித்தான்.அவன் பலமுறை அவளிடம் தன் காதலை சொல்லியும் அவள் கண்டுகொள்ளவில்லை.அவன் தன் காதலை கடிதமாக வடித்து அந்த பெண்ணிடம் கொடுத்தான்.அவளோ அதை படித்து பின் கிழித்து வீசினாள்.அவன் அந்த துண்டு காகிதங்களையும் சேகரித்தான்.விசயத்தை கேள்விப்பட்ட அவனது நண்பர்கள் அவனை திட்டி அந்த காகிதங்களை மீண்டும் தூர எறிந்தனர்.
எனினும் கடைசியாக ஒரே ஒருமுறை தன் காதலை அந்த பெண்ணிடம் சொல்லி பார்பதென்று முடிவு செய்து சென்றான் அவன்.இந்தமுறை அந்த பெண்ணின் மனமிறங்கியது. அவன் காதலை ஏற்றுகொண்டாள். மேலும் தான் கிழித்தெரிந்த காகிதங்கள் வேண்டுமென்றாள்.அவனும் ஆவலாக ஓடினான் அந்த காகிதங்களை தேடி.விளையாடியது விதி. ஓடியவனை அடித்து தூக்கியது லாரி.அவன் அந்த பெண்ணின் கண் முன்னேயே பலியானான்.விபத்தில் தெரித்த அவனது ரத்த துளிகள் அந்த பெண்ணின் வெண்ணிற ஆடைமீதும் தெரித்து கறையானது.விபத்தின் அதிர்ச்சியில் அந்த பெண்ணும் மயங்கிசரிந்தாள். மயக்கத்திலிருந்து மீண்டவளை ஒரு சாமியாரிடம் அழைத்து போனார்கள் அவளின் பெற்றோர்.சாமியார் சொன்னார், அந்த ஆவியின் ரத்தம் இவள் மீது தெரித்ததால், இவள

்மீது கறைபட்டுள்ளது.பெற்றோர் கேட்டனர், ” கறையை போக்க ஏதேனும் பரிகாரம் சொல்லுங்க சாமி?”

சாமியாரும் அந்த ரகசியத்தை சொல்லிட்டார்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அந்த கறை, இந்த கறை, எந்த கறையா இருந்தாலும் சர்ஃப் எக்ஸல் இருக்குல்ல.

Monday, 22 October 2012

ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.." "ஏன்..?" "பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.."

Sunday, 21 October 2012

மழை வேண்டி யாகம் நடத்தராங்களே கரண்டு வேனுமுன்னும் யாகம் நடத்தலாமுல்ல ?

நல்ல தமிழ் எங்கிருந்தாலும் தேடி போயி படிப்பேன்! நல்ல பிகர் எங்கிருந்தாலும் தேடி போயி ரசிப்பேன்!