Wednesday 24 October 2012

ஆவியின் ரத்தம்

ஒரு பையன் ஒரு பெண்ணை காதலித்தான்.அவன் பலமுறை அவளிடம் தன் காதலை சொல்லியும் அவள் கண்டுகொள்ளவில்லை.அவன் தன் காதலை கடிதமாக வடித்து அந்த பெண்ணிடம் கொடுத்தான்.அவளோ அதை படித்து பின் கிழித்து வீசினாள்.அவன் அந்த துண்டு காகிதங்களையும் சேகரித்தான்.விசயத்தை கேள்விப்பட்ட அவனது நண்பர்கள் அவனை திட்டி அந்த காகிதங்களை மீண்டும் தூர எறிந்தனர்.
எனினும் கடைசியாக ஒரே ஒருமுறை தன் காதலை அந்த பெண்ணிடம் சொல்லி பார்பதென்று முடிவு செய்து சென்றான் அவன்.இந்தமுறை அந்த பெண்ணின் மனமிறங்கியது. அவன் காதலை ஏற்றுகொண்டாள். மேலும் தான் கிழித்தெரிந்த காகிதங்கள் வேண்டுமென்றாள்.அவனும் ஆவலாக ஓடினான் அந்த காகிதங்களை தேடி.விளையாடியது விதி. ஓடியவனை அடித்து தூக்கியது லாரி.அவன் அந்த பெண்ணின் கண் முன்னேயே பலியானான்.விபத்தில் தெரித்த அவனது ரத்த துளிகள் அந்த பெண்ணின் வெண்ணிற ஆடைமீதும் தெரித்து கறையானது.விபத்தின் அதிர்ச்சியில் அந்த பெண்ணும் மயங்கிசரிந்தாள். மயக்கத்திலிருந்து மீண்டவளை ஒரு சாமியாரிடம் அழைத்து போனார்கள் அவளின் பெற்றோர்.சாமியார் சொன்னார், அந்த ஆவியின் ரத்தம் இவள் மீது தெரித்ததால், இவள

்மீது கறைபட்டுள்ளது.பெற்றோர் கேட்டனர், ” கறையை போக்க ஏதேனும் பரிகாரம் சொல்லுங்க சாமி?”

சாமியாரும் அந்த ரகசியத்தை சொல்லிட்டார்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அந்த கறை, இந்த கறை, எந்த கறையா இருந்தாலும் சர்ஃப் எக்ஸல் இருக்குல்ல.

No comments:

Post a Comment