Tuesday 30 October 2012

ஒரு நாய் கடைக்கு

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....

# # # #
நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது..

வெங்காயம்


ஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி & ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம்.ஒரு நாள் 3ம் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கறைஞ்சி போயிடுச்சாம்.தக்காளியும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம்.வீட்டுக்கு வர வழியில லாரியில அடிபட்டு தக்காளியும் நசுங்கி செத்துப்போச்சாம்.உடனே வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி “ஐஸ் கிரீம்
செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி
செத்தப்ப நான் அழுதேன்..ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா
எனக்குன்னு அழ யாரு இருக்கா”ன்னு கேட்டுச்சாம்..அதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்!
அதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி
வருதாம்..!!

Wednesday 24 October 2012

ஆவியின் ரத்தம்

ஒரு பையன் ஒரு பெண்ணை காதலித்தான்.அவன் பலமுறை அவளிடம் தன் காதலை சொல்லியும் அவள் கண்டுகொள்ளவில்லை.அவன் தன் காதலை கடிதமாக வடித்து அந்த பெண்ணிடம் கொடுத்தான்.அவளோ அதை படித்து பின் கிழித்து வீசினாள்.அவன் அந்த துண்டு காகிதங்களையும் சேகரித்தான்.விசயத்தை கேள்விப்பட்ட அவனது நண்பர்கள் அவனை திட்டி அந்த காகிதங்களை மீண்டும் தூர எறிந்தனர்.
எனினும் கடைசியாக ஒரே ஒருமுறை தன் காதலை அந்த பெண்ணிடம் சொல்லி பார்பதென்று முடிவு செய்து சென்றான் அவன்.இந்தமுறை அந்த பெண்ணின் மனமிறங்கியது. அவன் காதலை ஏற்றுகொண்டாள். மேலும் தான் கிழித்தெரிந்த காகிதங்கள் வேண்டுமென்றாள்.அவனும் ஆவலாக ஓடினான் அந்த காகிதங்களை தேடி.விளையாடியது விதி. ஓடியவனை அடித்து தூக்கியது லாரி.அவன் அந்த பெண்ணின் கண் முன்னேயே பலியானான்.விபத்தில் தெரித்த அவனது ரத்த துளிகள் அந்த பெண்ணின் வெண்ணிற ஆடைமீதும் தெரித்து கறையானது.விபத்தின் அதிர்ச்சியில் அந்த பெண்ணும் மயங்கிசரிந்தாள். மயக்கத்திலிருந்து மீண்டவளை ஒரு சாமியாரிடம் அழைத்து போனார்கள் அவளின் பெற்றோர்.சாமியார் சொன்னார், அந்த ஆவியின் ரத்தம் இவள் மீது தெரித்ததால், இவள

்மீது கறைபட்டுள்ளது.பெற்றோர் கேட்டனர், ” கறையை போக்க ஏதேனும் பரிகாரம் சொல்லுங்க சாமி?”

சாமியாரும் அந்த ரகசியத்தை சொல்லிட்டார்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அந்த கறை, இந்த கறை, எந்த கறையா இருந்தாலும் சர்ஃப் எக்ஸல் இருக்குல்ல.

Monday 22 October 2012

ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.." "ஏன்..?" "பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.."

Sunday 21 October 2012

மழை வேண்டி யாகம் நடத்தராங்களே கரண்டு வேனுமுன்னும் யாகம் நடத்தலாமுல்ல ?

நல்ல தமிழ் எங்கிருந்தாலும் தேடி போயி படிப்பேன்! நல்ல பிகர் எங்கிருந்தாலும் தேடி போயி ரசிப்பேன்!

சலூன்காரர் எப்போதும் எனது மரியாதைக்குரியவர் ஏனெனில் எனக்கு முதல் பொன்னாடை போர்த்தியது அவர்தான்!

Friday 19 October 2012

தி மு க தலைவருக்கு பிடிக்காத இடம் ஜெராக்ஸ் கடைதான் # ஜெ ராக்ஸ்

இந்தியர்களின் லாஜிக் சிம்பிள் - கெட்டு வாழ்பவன் புத்திசாலி, ஆனால் நன்றாக வாழ்ந்து கெட்டவன் முட்டாள் ;)

Thursday 18 October 2012

ஓவர் தண்ணியானு பசங்களை எப்போ கேட்டாலும் அசட்டுசிரிப்பு மட்டும்தான்..ஆனா ஓவர் மேக்அப்பானு பொண்ணுககிட்டே ஒரேதடவை கேட்டுட்டா..ஷப்பா

Thursday 11 October 2012

ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....

Tuesday 9 October 2012

இன்னைக்கு எங்க ஏரியாவுல பராமரிப்பு(!) பணிகளுக்காக காலைல 9மணியில இருந்து மாலை 5மணி வர கரண்ட் கட்.."செத்த கிளிக்கு எதுக்குடா கூண்டு...???!!!"
பேச்சிலர்களை பொறுத்தவரை வீடு பெருக்குறதுன்னா, குப்பையை ஒரு மூலையில இருந்து இன்னொரு மூலைக்கு தள்ளுவதே!

Friday 5 October 2012

ஆபீஸ் ல கம்ப்யூட்டர் மானிட்டர்ல பிரச்னை...

அத சரி பண்ண வந்த சர்விஸ் என்ஜின்யர்.. அத கொஞ்ச நேரம் சரி பண்ண ட்ரை பன்னிருக்கார்... ஆனா சரி ஆகல.. உடனே...என்ஜினியர் ...சார் மானிடர் இங்க சரி பண்ண முடியாது.. நாங்க மானிட்டர எடுத்துட்டு போய் சரி பண்ணி கொண்டு வர்றோம்...

ஆபீசர்: நோ நோ..... நான் எல்லா முக்கியமான பைல்ஸ் எல்லாத்தையும் டெஸ்க் டாப் ல ஸ்டோர் பண்ணிருக்கேன்.... மானிடர் லாம் எடுத்துட்டு போக கூடாது

......

என்ஜினீயர்: சார் உங்களுக்கு இது புரியல.. உங்க உயரதிகாரிய கூப்டுங்க. நான் சொல்லிட்டு மானிட்டர் எடுத்துட்டு போறேன்...

உயரதிகாரி வந்தார்...

வந்ததும். ஆபீசர பாத்து.... யோவ் ஏன்யா அந்த ஆள் கூட பிரச்ன பண்ணிட்டு இருக்க...

இதுக்கு தான் சொன்னேன்.. எல்லாத்தையும் டெஸ்க் டாப் ல ஸ்டோர் பன்னாதய்யான்னு......

(இது சென்னை அரசு அலுவலகத்தில் நடந்த உண்மை சம்பவம் )
AMERICAN: yesterday i told 'I LOVE YOU' to one Tamil girl.
INDIAN: what she say?
AMERCAN(happily); she said "COME NAUGHTY WELCOME OUR PINCH ROOM"
INDIAN: ada loosu payale! apdiyilla...
Ava sonnathu "கம்மனாட்டி வெளக்குமாறு பிஞ்சிரும் "nu.
TEACHER : Yaen Homework Pannala?

Stu(vandu) : Current illa..

TEAC : Candle yethi Yeludalamla?

Stu(vandu) : Matchbox Saami Room la Irunthuchu..

TEAC : Yaen Atha Yeduthu Patha Vakkala?

Stu(vandu) : Naan Kulikala Athan Saami Room Kulla Pogala..

TEAC : Yaen Kulikala?

Stu(vandu) : Kulika Thanni Illa..

TEAC : Yean Thanni Illa?

Stu(vandu) : Motor Odala..

TEAC : Yen Motor Odala?

Stu(vandu) : Ada Sotta Thalaya, Athan firstey Sonnen la Current Illanu..

TEAC : ???:...
Call summary Analysis:

Boy to boy = 00:00:59

Boy to mom = 00:10:30
...

Boy to dad=00:02:36

Boy to girl = 01:15:01


Girl to girl = 00:29:59

Girl to boy=00:00:05
ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்தாராம் “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்..

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா “கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு கேட்டானாம்..

“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டு வீட்டுக்
கு போய்ட்டு இருந்தானாம். வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..

அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம
“குப்புமி”
“குப்புமி”
“குப்புமி”ன்னு சொன்னானாம் பாவம்

கடைசிவரை அவனுக்கு ”சாவே” வரலையாம்…

சாமியின் background voice .. "வரம் கேக்குற உனக்கே இத்தன அடப்புனா குடுக்குற எனக்கு எவ்வோளவு இருக்கும்... "
குடிக்கிறவன் சொல்ற ரெண்டே ரெண்டு பொய்
1) ஏறவே இல்லடா -அடிக்கும்போது
 2)இனிமேல அடிக்கவே கூடாதுடா -விடிஞ்சபிறகு

Thursday 4 October 2012

ஒரு பணக்கார மாமியாருக்கு ....
.மருமகன்கள் .தன மீது எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க மாமியாருக்கு ஆசையா இருந்தது.
ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகு பயணம் போனாள்.நடுவழியில் தண்ணிக்குள் தர்செயயலாக விழுந்தது போல விழ மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு .
 மறுநாள் அவர் வீட்டு வாசல்ல ஒரு  புத்தம் புதிய கார் நின்னுட்டிருந்தது .அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது "மாமியாரின் அன்பு பரிசு"
ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது ...அவரும் ஒரு கார் வென்றார். மாமியாரின் அன்பு பரிசாக !
 மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது......அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல மாமியார் கடைசியா பரிதாபமா "லுக்கு" விட்டப்ப கத்தினான் "பொய் தொலை ". எனக்கு கார் வேணாம் .சாவுற வரைக்கும் சைக்கிள்ள போய்க்கிறேன்.
பொண்ணா வளர்த்து வச்சிருக்கே.??  "மாமியார் செத்துட்டுது".
மறுநாள் அவன் வீட்டு வாசல்ல ஒரு விலையுர்ந்த  பாரின் கார் நின்னுச்சு...

."மாமனாரின் அன்பு பரிசு" என்ற அட்டையோட ........
ஓவரா படிச்சவன்கிட்டையும் பேச முடியாது, ஓவரா குடிச்சவன்கிட்டையும் பேச முடியாது # பொதுவா சொன்னேன்
சார்,தக்காளி வாங்க உழவர் சந்தை போன என் கணவர் இன்னும் வீடு திரும்பல.இப்போ நான் என்ன செய்ய ? சிம்ப்பிள் . லெமன் ரைஸ் செய்ங்க
மூணு பெக்குக்கு அப்புறம் பிரியாணியும் ஒண்ணுதான்..புளிசாதமும் ஒண்ணுதான்..ஹிம்..என்ன வாழக்கடா இது!
ஒரு பெண் நம்மை காதலிக்கிறாளென்று லேட்டா தெரிவதைவிட,பக்கத்து வீட்டில் ஃபிகர் இருந்தும் லேட்டா தெரிவது தான் கொடுமையானது!

Wednesday 3 October 2012

2 நாளா யோசிச்சு பார்த்தேன்.காந்திக்காக ஒரு நாள் டாஸ்மாக் மூடலாம்ன்னா,பெரியாருக்காக ஒரு நாள் கோவில எல்லா மூடுறதுதானே நியாயம்?